மகிந்திரா TUV 300 மாடலின் முன்பதிவு நாளை தொடங்கப்படுகிறது

புத்தம் புதிய மகிந்திரா TUV 300 எனும் காம்பேக்ட் SUV செப்டம்பர் 10 ஆம் தேதி  வெளியிடப்படும் நிலையில் நாளை முதல் இதன் முன்பதிவு தொடங்கப்படுகிறது என மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாடல் சென்னையில் உள்ள மகிந்திரா ரிசர்ச் வேலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் முற்றிலுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான  நீளம் கொண்ட மாடலாக இருக்கும். மேலும் இந்த மாடல்  புத்தம் புதிய  1.5 லிட்டர் mHawk80 டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் அதிக செயல்திறன் கொண்ட என்ஜினாக இருக்கும். மேலும் இந்த என்ஜின் 80 bhp திறனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் வடிவம் ராணுவ டாங்கின் உருவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த மாடலின் படங்கள் சில நாட்களுக்கு முன்பு தான் இணையத்தில் வெளியானது. முழுமையாக இந்த மாடல் கம்பீரமான தோற்றமளிக்கிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே மகிந்திரா நிறுவனம் ஸ்டீரிங் வீலின் படத்தை மட்டும் வெளியிட்டிருந்தது. உட்புறமும் மிகவும் நேர்த்தியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டம் இந்த மாடலில் கிடைக்கும் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை இந்த மாடலில் கிடைக்குமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த மாடல் 7 பேர் அமரக்கூடிய இருக்கை கொண்டதாக இருக்கும். மேலும் இந்த மாடல் 7 முதல் 10 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.