மஹிந்திரா TUV500 மாடலின் சோதனை ஒட்டப்படங்கள் மீண்டும் சிக்கியது

மஹிந்திரா நிறுவனம் TUV300 மாடலின் அதிக வீல் பேஸ் கொண்ட மாடலை நீண்ட நாட்களாகவே சோதனை செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் உள்ள மேட்டுப்பாளயம் பகுதியில் இந்த மாடல் சோதனை செய்யயப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் இதன் சோதனை ஒட்டப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதன் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பு அப்படியே TUV300 மாடல் போலவே உள்ளது. ஆனால் இதன் நீளம் தான் அதிகம். அதேபோல் இதன் பின்புறமும் TUV300 மாடலை விட அதிக சரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாடல் 1.99 லிட்டர் எஞ்சினில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் தற்போது டெல்லியில் விற்பனையில் செய்யப்படும் ஸ்கோர்பியோ மற்றும் XUV500 மாடல்களில் உள்ள எஞ்சின் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் இந்த வருட இறுதியில் பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Image Source: Rushlane.com

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.