ரூ. 16.72 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மஹிந்திரா XUV500 ஸ்போர்ட்ஸ் சிறப்பு பதிப்பு மாடல்

மஹிந்திரா நிறுவனம் XUV500 மாடலின் சிறப்பு பதிப்பு மாடலான ஸ்போர்ட்ஸ் சிறப்பு பதிப்பு மாடலை ரூ. 16.72 லட்சம் சென்னை ஷோ ரூம் ஆரம்ப  விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். மேனுவல் மாடல் ரூ. 16.72 லட்சம் விலையிலும் ஆட்டோமேட்டிக் மாடல் ரூ. 17.75 லட்சம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பதிப்பு மாடலில் W10 வேரியண்ட்டின் அடிப்படையில்  ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. முன்புற பானட், பக்கவாட்டு கண்ணாடி மற்றும் கதவுகளில் புதிய கிராபிக்ஸ் ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய அலாய் வீல், சிவப்பு வண்ண பிரேக் கிளிப், ஆரஞ்சு வண்ண கைப்பிடி மற்றும் ரூப் ரயில், பணிவிளக்கு பகுதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின் C-பில்லர், தேஸ் போர்டு, சாவி மற்றும் பின்புற பகுதிகளில் ஸ்போர்ட்ஸ் பேட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் W10  வேரியண்ட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் சான் ரூப் மற்றும் ABS என அனைத்து விதமான வசதிகளும் கொண்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 2.2 லிட்டர் MHAWK  எஞ்சினில் தான் கிடைக்கும். இந்த எஞ்சின் 140  BHP  திறனையும் 330  NM இழுவைத்திறனையும் வழங்கும். இதன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு மாடலிலுமே நான்கு வீல் டிரைவ் சிஸ்டம் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.