ரூ. 10.27 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது இன்டெல்லி ஹைபிரிட் கொண்ட மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா நிறுவனம் இன்டெல்லி ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட  ஸ்கார்பியோ மாடலை ரூ. 10.27 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் S4, S4+, S4+ 4wd, S6+, S8, S10 மற்றும் S10-4WD போன்ற வேரியண்ட்டுகளில் மட்டும் கிடைக்கும். 

இந்த தொழில்நுட்பம் மூலம் 7 சதவீதம் வரை எரிபொருள் சிக்கனம் கிடைக்கும். இந்த தொழில்நுட்பம் என்ஜின் ஸ்டார்ட் செய்யும் போது கூடுதல் திறனை வழங்கும் மேலும்  ஐடிலிங்க் கண்டிசனில் இருக்கும் போது என்ஜினை ஆன்/ஆப் செய்தும்  செயல்திறனை அதிகரிக்க உதவி புரியும்.  மேலும்  ரீஜெனரேடிவ்  ப்ரேகிங் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும். இந்த தொழில்நுட்பம் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொண்ட மாடலில் மட்டுமே கிடைக்கிறது.

இந்த மாடலில்  2.2 லிட்டர் mHawk  டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 120 bhp (4000 rpm) திறனும் 280Nm (1800-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் ஏற்கனவே மைல்டு ஹைபிரிட் எனும் தொழிநுட்பத்துடன் வெளியிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

வேரியண்ட் வாரியாக சென்னை  ஷோரூம் விலை விவரம்:

ஸ்கார்பியோ S4: ரூ. 10,27,637
ஸ்கார்பியோ S4+: ரூ. 10,72,174
ஸ்கார்பியோ S4+ 4WD: ரூ. 11,94,569
ஸ்கார்பியோ S6+: ரூ. 11,67,501
ஸ்கார்பியோ S8: ரூ. 12,80,079
ஸ்கார்பியோ S10: ரூ. 13,49,582
ஸ்கார்பியோ S10 4WD: ரூ. 14,70,786

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.