புதிய MPV காரை சோதனை செய்து வரும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் ஒரு புத்தம் புதிய MPV  காரை சோதனை செய்து வருகிறது. சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இப்போது இணையத்தில் வலம் வருகிறது. 

மூன்று வரிசை இருக்கையை கொண்ட ஒரு பெரிய MPV  போல தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் முழுவதும் மூடப்பட்டிருந்ததால் தெளிவான வடிவமைப்பு தெரியவில்லை. இந்த புதிய மாடல் டொயோடா இன்னோவா மாடலுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா XUV500 மற்றும் ஸ்கார்பியோ போன்ற மாடல்களில் உள்ள 2.2 லிட்டர் மற்றும் 1.99 லிட்டர் டீல் என்ஜினிலேயே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் TUV300 மாடலின் அடிப்படையில் TUV500 எனும்  மாடலை வெளியிட இருப்பதாகவும் ஆட்டோ மொபைல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

Source:GaadiWaadi

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.