மாருதி சுசுகியின் புதிய லிமிடெட் எடிசன் அல்டோ K10 அர்பனோ

பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி சுசுகி நிறுவனம் புதிய சிறப்பு பதிப்பான அல்டோ K10 அர்பனோ மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் 18 புதிய உபகரணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மொத மதப்பு ரூபாய் 16990 கொண்டதாக இருக்கும். மேலும் 90 சதவீதம் வரை கடனுதவி திட்டமும் வழங்கப்படுகிறது.

வெளிப்புறத்தில் புதிய பக்கவாட்டு கண்ணாடி குரோம் கார்னிஷ், புதிய முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், புதிய வீல் ஆர்ச் மற்றும் புதிய முகப்பு குரோம் கிரில் ஆகியவை கிடைக்கும்.

உட்புறம் புதிய வண்ணத்திலான இருக்கை மற்றும் ஸ்டீரிங் கவர், புதிய தரை விரிப்புகள் மற்றும் புதிய LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சிறப்பு பதிப்பை வெளியிட்டுள்ளது. இருந்தாலும் ரெனால்ட் க்விடின் வரவு அல்டோ K10 மாடலுக்கு கடுமையான போட்டியாகவே இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.