ரூ. 7.85 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மாருதி சுசூகி எர்டிகா சிறப்பு பதிப்பு மாடல்

மாருதி சுசூகி நிறுவனம் ரூ. 7.85 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சினிலும் VXI  மற்றும் VDI  வேரியண்ட்டுகளில் மட்டும் கிடைக்கும். மேலும் இந்த மாடல் மெரூன், சில்வர் மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களில் மட்டும் கிடைக்கும்.

இந்த மாடல் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 1.4 லிட்டர்  பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின்  95BHP (6000 RPM) திறனும்  130NM (4000RPM) டார்க் எனும்  இழுவைதிறனும்  டீசல்  என்ஜின்  90BHP (4000 RPM) திறனும் 200NM (1750RPM) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

இந்த சிறப்பு பதிப்பு மாடலில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள்:
1. லிமிடெட் எடிசன் பேட்ச்
2. பக்கவாட்டு குரோம் மோல்டிங்
3. பனி விளக்கில் குரோம் பெஸ்ஸல்
4. புதிய அலாய் வீல்
5. மெரூன் வண்ண இருக்கை கவர்
6. முன்புற இருக்கையில் கை வைக்கும் பகுதி 
7. உட்புற மர வேலைப்பாடு 
8. இரட்டை வண்ண ஸ்டேரிங் கவர் 
9. ஆம்பியண்ட் லிட் மற்றும் குசன் பில்லோ

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.