பலேனோ மற்றும் டிசைர் AGS கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம் காற்றுப்பையை கட்டுப்படுத்தும் மென்பொருளில் உள்ள பிரச்சனை காரணமாக ஆகஸ்ட் 3, 2015 லிருந்து மே 17, 2016 வரை தயாரிக்கப்பட்ட 75,419 பலேனோ கார்களையும் மற்றும் எரிபொருள் பில்டரில் உள்ள பிரச்சனை காரணமாக ஆகஸ்ட் 3, 2015 லிருந்து மார்ச் 22, 2016 வரை தயாரிக்கப்பட்ட 15,995 டீஸல் பலேனோ கார்களையும் திரும்ப அழைக்கிறது.

கூடுதலாக எரிபொருள் பில்டரில் உள்ள பிரச்சனை காரணமாக  1,961 ஆட்டோமேடிக் டீசல் டிசைர் கார்களையும் திரும்ப அழைக்கிறது மாருதி நிறுவனம். இவை அனைத்தும் இலவசமாக மாருதி சுசுகி மற்றும் நெக்சா ஷோ ரூம்களில் செய்து தரப்படும். 

இதில் உங்கள் காரும் இந்த லிஸ்டிஸ் உள்ளதா என்பதை மாருதியின் இணையதளத்திலோ அல்லது அருகில் உள்ள மாருதி சுசுகி ஷோ ரூம்களிலோ தெரிந்து கொள்ளலாம். மேலும் மாருதி நிறுவனமே நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தெரிவித்தும் வருகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.