மெர்சிடிஸ் பென்ஸ் GLE450 AMG கூப் மாடல் ரூ.86.4 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு 15 மாடல்களை வெளியிட்ட நிலையில் தற்போது 2016 ஆம் ஆண்டின் முதல் மாடலான   GLE450 AMG கூப் SUV மாடலை ரூ.86.4 லட்சம் மும்பை ஷோரூம்  விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இந்த ஆண்டு இந்த மாடலுடன் சேர்த்து மொத்தம் 12 புதிய  மாடல்கள் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த மாடல் SUV மற்றும் கூப் வடிவத்தின் கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. SUV மாடலான இதன் பின்புறத்தில் கூப் மாடல் போன்று சரிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ V 6 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 362 Bhp திறனையும் 516 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6வினாடிகலில் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலில் 9 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

மெர்சிடிஸ் பென்ஸ்  GLE450 AMG கூப் SUV மாடல் BMW X 6 மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.