வெளிப்படுத்தப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் X கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் X கிளாஸ் மாடலின் கான்செப்டை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. தற்போது இதன் தயாரிப்பு நிலை மாடலை தென் ஆப்ரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் படங்கள் மற்றும் சில விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.3 லிட்டர் டீசல் என்ஜின்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 7 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ் மிஷனில் கிடைக்கும். இதன் திறன் பின்புற வீலுக்கு கடத்தப்படும். மேலும் இந்த மாடலில் 4Matic எனும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

முதலில் இந்த மாடல் தென் ஆப்ரிக்க மற்றும் ஆஸ்திரேலிய சந்தைகளில் வெளியிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து பிற நாடுகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.