2.6 கோடி விலையில் மெர்சிடிஸ் மேபக் S600 இந்தியாவில் வெளியிடப்பட்டது

ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் விலையுயர்ந்த சொகுசு கார்களில் ஒன்றான மேபக் S600 மாடலை  இந்தியாவில் வெளியிட்டுள்ளது. மேபக் S600  மாடல் 2.6 கோடி விலையில் கிடைக்கும். மேபக் S600  மாடல் தற்போது விற்பனையில் இருக்கும் S கிளாஸ் மாடலை விட கூடுதல் வீல் பேஸ் கொண்டது. மெர்சிடிஸ் பென்ஸ் 2015 ஆம் ஆண்டு முடிவுக்குள் 15 மாடல்களை வெளியிடுவதாக இருந்தது. ஏற்கனவே 10 மாடல்களை இந்த வருடத்தில் மட்டும் வெளியிட்ட நிலையில் மேலும் ஒரு மாடலை தற்போது வெளியிட்டு இருக்கிறது. 

இந்த மாடலில் 6.0 லிட்டர் V  12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 523 bhp திறனும் 830 Nm இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 249 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலில் 7 ஸ்பீட் கொண்டஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மிகசிறந்த சொகுசு அனுபவத்தை தரும் வகையில் இருக்கைகளும் உட்புறமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.