வெளிப்படுத்தப்பட்டது மினி கிளப்மென் ஆல்4 ஸ்க்ராம்ப்ளர்

மினி நிறுவனம்  கிளப்மென் மாடலின் ஆப் ரோடு வெர்சனான ஆல்4 ஸ்க்ராம்ப்ளர் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் BMW ஸ்க்ராம்ப்ளர் பைக் வடிவமைப்பின் தூண்டுதலால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப் ரோடு பிரியர்களுக்கு இந்த மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.

இந்த மாடல் ஆப் ரோடு தன்மைக்கு ஏற்றவாறு பெரிய ஆப் ரோடு டயர்கள், அதிக தரை இடைவெளி, பிளாஸ்டிக் கிளடிங்குகள், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்சன் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் சந்தனம் மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாடலில் ஆல் வில் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என தகவல்கள் இல்லை. மேலும் இந்த கார் ஒரு சிறப்பான சிறிய ஆப் ரோடு காராக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.