ரூ.34.9 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது மினி கூப்பர் கன்வெர்டிப்ல்

BMW இந்தியா நிறுவனம் மினி கூப்பர் கன்வெர்டிப்ல் மாடலை ரூ.34.9 லட்சம் ஷோ ரூம் விலையில் வெளியிட்டுள்ளது.  இது 3 கதவு கொண்ட மினி கூபர் மாடலின்  திறந்த மேற்கூரை (கன்வெர்டிப்ல்) வெர்சன் ஆகும்.

உட்புறம் மற்றும் வெளிப்புற வடிவமைப்பில் ஏதும் பெரிய மாற்றங்கள் கிடையாது. சொகுசு அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்தும் மற்ற மினி கூப்பர் மாடல்களில் உள்ளது போலவே கிடைக்கும். இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் 189 Bhp திறனையும் 280 Nm இழுவை திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 வினாடிகளிலும் அதிகபட்சமாக 233 கிலோ மீட்டர் வேகம் வரையும் செல்லும்.

BMW இந்தியா நிறுவனம் இந்தியாவில் மினி கூப்பர் D 5 டோர், மினி கூப்பர் D 3 டோர், மினி கூப்பர் S 3 டோர், மினி கூப்பர் கன்வெர்டிபில் மற்றும் மினி கூப்பர் கன்ட்ரிமென் ஆகிய ஐந்து மாடல்களை விற்பனை செய்கிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.