வெளிப்படுத்தப்பட்டது அடுத்த தலைமுறை ரெனால்ட் ஃப்ளூயன்ஸ்

ரெனால்ட் நிறுவனம் அடுத்த தலைமுறை ஃப்ளூயன்ஸ் மாடலை மேக்னே கிராண்ட் கூப் எனும் பெயரில் வெளிப்படுத்தியுள்ளது. மூன்றாம் தலைமுறை மேக்னே ஹேட்ச் பேக் மாடலின் அடிப்படையில் தான் முந்தைய தலைமுறை ஃப்ளூயன்ஸ் செடான் மாடல் உருவாக்கப்பட்டது. ஆனால் ரெனால்ட் நிறுவனம் இந்த புதிய செடான் மாடலுக்கு மேக்னே எனும் பெயரையே சூட்டியுள்ளது.

அடுத்த தலைமுறைக்கு ஏற்ற LED  விளக்குகள், சன்ரூப்   மற்றும் ஏராளமான வடிவமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கூப் வடிவிலான மாடலாக இருக்கும். உட்புறமும் அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு 8.7 இன்ச் டச் ஸ்க்ரீன்  ஆடியோ சிஸ்டம் ஆகியாவை கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த மாடல் உலகளவில் 1.4 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் & 1.6 லிட்டர்  டர்போ சார்ஜ் டீசல் என்ஜின் ஆகியவற்றுடன் கிடைக்கும்.

ஆனால் இந்தியாவில் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடன் கிடைக்கும்.  இந்த மாடல் வோல்க்ஸ் வேகன் ஜீட்டா மற்றும் செவ்ரோலெட் குரூஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.