அடுத்த தலைமுறை மைக்ராவின் டீசரை வெளியிட்டது நிசான்

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அடுத்த தலைமுறை மைக்ரா மாடலை அறிமுகப்படுத்த உள்ளது அதன் முன்னோட்டமாக அதன் டீசரை வெளியிட்டுள்ளது. நிசான் மைக்ரா மாடல் இந்தியாவில் குறைந்த அளவில் விற்பனை ஆனாலும் உலகளவில் மிக அதிக விற்பனையை பதிவு செய்யும் மாடல்களில் குறிப்பிடத்தக்கது.

நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர் வீடியோவில் முன்புறமும் பின்புறமும் ஓரளவு தெரிகிறது. இதை வைத்து பார்க்கும் போது இந்த மாடலில் நிசான் நிறுவனத்தின் புதிய V கிரில்  மற்றும் LED விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த மாடல் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்வே கான்செப்ட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் வெளியிடப்படும் கிக்ஸ் மாடலின் உட்புற வடிவம் அதிகம் இதில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இந்தியாவில் இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.