X - ட்ரைல் மற்றும் GT - R மாடல்களை விரைவில் வெளியிடுகிறது நிசான்

நிசான் நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் GT - R மாடலையும் X - ட்ரைல் மாடலை 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்திலும் அதை தொடந்து 4 மீட்டர் நீளத்துக்கு குறைவான ஒரு காம்பேக்ட் செடான் மாடலையும் வெளியிட இருக்கிறது. 

நிசான் GT - R மாடல் அதிக செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த மாடலில் 3.6 லிட்டர் ட்வின் டர்போ V 6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 560 bhp திறனையும் 463 Nm இழுவைதிரனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 310 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கிடைக்கும்.

இந்த மாடல் தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் எனவும் மேலும் 2 கோடி விலையில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த தலைமுறை X - ட்ரைல் SUV  மாடலை நிசான் நிறுவனம் 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் 2013 அம ஆண்டு நடந்த ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடல் ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கிறது. 

உட்புறம், வெளிப்புறம் மற்றும் என்ஜினிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1.6 லிட்டர்  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 127 bhp திறனையும் 320 Nm இழுவைதிரனையும் வழங்கும். இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸும் கிடைக்கும்.  மேலும் இந்த மாடல் 30 முதல் 35 லட்சம் விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நிசான் நிறுவனம் ஒரு 4 மீட்டர் நீளத்துக்கு குறைவான ஒரு காம்பேக்ட் செடான்  மாடலி சோதனை செய்து வருகிறது. இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.