பெட்ரோல் என்ஜினுடன் விரைவில் வெளியிடப்படும் ஜீப் வ்ரேங்க்ளர் அன்லிமிடெட்

பியட் நிறுவனம் இந்தியாவில் பெட்ரோல் என்ஜினுடன் கூடிய  ஜீப் வ்ரேங்க்ளர் அன்லிமிடெட் மாடலை விரைவில் வெளியிட உள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் ஜீப் மாடல்களிலேயே வ்ரேங்க்ளர் அன்லிமிடெட் மாடல் தான் குறைந்த விலை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் ரூ.71.59 லட்சம் டெல்லி ஷோ ரூம் விலையில் கிடைக்கிறது. 

தற்போது இந்த மாடல் 3.6 லிட்டர் V6 என்ஜினுடன் வெளியிடப்பட உள்ளது. இந்த என்ஜின் 285  Bhp  திறனையும் 353  Nm  இழுவைத்திறனையும் வழங்கும். டீசல் என்ஜின் போலவே இந்த மாடலிலும் 5 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ் மிஷனும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த மாடல் பழமையான டிசைன் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த ஒரு ஆப் ரோடு மாடல் ஆகும். ஆப் ரோடு மாடல் என்றாலும் டச் ஸ்க்ரீன் ஆடியோ, தானியங்கி குளிரூட்டி என சிறந்த சொகுசு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 200 Bhp  திறனையும் 460 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 5 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸும் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 12.1 Kmpl  மைலேஜ் தரும் என ARAI  சான்றளித்துள்ளது. மேலும் இந்த மாடல் கருப்பு, வெள்ளை, கிரானைட், சில்வர், சிவப்பு மற்றும் ரைனோ என ஆறு வண்ணங்களில் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.