மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் i10 மாடலின் படங்கள்

ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள மேம்படுத்தப்பட்ட கிராண்ட் I10 மாடலின் படங்களை இந்த தொகுப்பில் காணலாம். இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் அதிகாரப்பூர்வமாக 2016 ஆம் ஆண்டு பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த புதிய கிராண்ட் I10 மாடலில் மற்ற இடங்களை விட முன்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. புதிய க்ரில் அமைப்பு இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த க்ரில் அமைப்பு தான் இனி வரும் அனைத்து ஹூண்டாய் கார்களிலும்  இருக்கும். மேலும் முன்புறத்தில் வட்ட வடிவ  பனி விளக்குகள் மற்றும் பகல் நேரத்தில் ஒளிரும் LED  விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் சிறிய மற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. உட்புறத்திலும் பெரிய மாற்றங்கள் இல்லை. புதிய சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலின் பெட்ரோல் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் தான் கிடைக்கிறது. இது 83 BHP திறனையும் 114 NM இழுவைத்திறனையும் வழங்கும். ஆனால் இந்த மாடலின் டீசல் என்ஜினில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் புதிய 1.2 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இது 75 BHP திறனையும் 190 NM இழுவைத்திறனையும் வழங்கும்.  இதன்  பெட்ரோல் மாடல் 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 4 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சிலும் டீசல் மாடல் 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்சிலும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.