ரூ. 1.93 கோடி விலையில் வெளியிடப்பட்டது 2017 போர்ஷே பனமெரா டர்போ

போர்ஷே நிறுவனம் 2017 ஆம் ஆண்டு இரண்டாம் தலைமுறை பனமெரா டர்போ மாடலை ரூ.1.93 கோடி விலையில் வெளியிட்டுள்ளது. இது முந்தய மாடலை விட 70 கிலோ குறைவான எடை கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் கடந்த வருடம் ஜூன் மாதம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மாடலில் உட்புற மற்றும் வெளிப்புற டிசைன் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்திலும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் முந்தைய மாடலை விட நீளம்(35மிமீ), அகலம்(5மிமீ), உயரம்(5மிமீ) மற்றும் வீல்பேஸ்(30மிமீ) என அனைத்தும் அதிகம் கொண்டது. PDLS உடன் கூடிய LED முகப்புவிளக்கு, சன்ரூப், கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் போர்ஷேவின் புதிய 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 542 பிப் திறனையும் 770 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது முந்தய மாடலை விட  30Bhp  திறனும் 70 Nm இழுவைத்திறனும் அதிகம் கொண்டது. மேலும் இந்த மாடலில் புதிய எட்டு ஸ்பீட் கொண்ட  டியூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன்  பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.8 வினாடிகளிலும் அதிகபட்சமாகமணிக்கு 306 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.