ரெனோ க்விட் லிவ் பார் மோர் சிறப்பு பாதிப்பு மாடல் வெளியிடப்பட்டது

ரெனோ நிறுவனம் க்விட் மாடலின் லிவ் பார் மோர் எனும் சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பதிப்பு மாடல் 2016 ஆம் ஆண்டு மாடலில் மட்டுமே கூடுதல் விலை ஏதும் இல்லாமல் தற்போது கிடைக்கும் விலைக்கே கிடைக்கும். 

வெளிப்புறத்தில் புதிய பாடி கிராபிக்ஸ், புதிய சிவப்பு நிறத்துடன் கூடிய கிரில் மற்றும் சிவப்பு நிறத்துடன் கூடிய வீல் கவர் ஆகியவையும் உட்புறத்தில் சிவப்பு நிறம் கலந்த ஸ்டேரிங் கவர் மேலும் சில ஒப்பனை பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் உபகரணங்கள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

இந்த மாடல் 0.8 மற்றும் 1.0 லிட்டர் என்ஜினில் கிடைக்கிறது. 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த கார்  25.17 Kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

1.0 லிட்டர் என்ஜின் 67 Bhp  திறனையும் 91 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். இந்த மாடல் லிட்டருக்கு 24.04 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ARAI  சான்றளித்துள்ளது. மேலும் 1.0 லிட்டர் மாடல் AMT  கியர் பாக்சிலும் கிடைக்கும்.  இந்த AMT கியர்  பாக்ஸ் கொண்ட மாடலில் எல்லா மாடலிலும் இருப்பது போன்று கியர் லிவர் கொடுக்கப்படாமல் டேஸ் போர்டில் டிரைவ் , நியுட்ரல் மற்றும் ரிவேர்ஸ் எனும் மூன்று ஆப்சன்கள் கொண்ட ரோட்டரி கியர் நாப்  மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.