அதிகாப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது ரெனால்ட் கேப்டர் கிராஸ் ஓவர்
ரெனால்ட் நிறுவனம் அதிகாப்பூர்வமாக கேப்டர் கிராஸ் ஓவர் மாடலை வெளிப்படுத்தியது. இதன் டீசர் படத்தை சில நாட்களுக்கு முன்பு தான் ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டது. இந்த மாடல் முதலில் ரஸ்யாவில வெளியிடப்படும் பிறகு இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாடல் ஐரோப்பாவில் விற்பனையில் இருக்கும் கேப்டர் மாடல் கிடையாது. அந்த மடலின் வடிவத்தை மட்டும் அப்படியே பயன் படுத்தி டஸ்டர் மாடலின் அடிப்படையில் இந்தியா போன்ற நாடுகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டஸ்டர் மாடலில் உள்ள அதே என்ஜின் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாடல் 4333 மிமீ நீளமும், 1813 மிமீ அகலமும், 1613 மிமீ உயரமும் மற்றும் 204 மிமீ தரை இடைவெளியும் கொண்டது. 387 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot Space ) இட வசதி கொண்டது.
இந்த மாடல் டஸ்டர் மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்படும். மேலும் இந்த மாடல் மகிந்திரா XUV500, டாடா ஹெக்சா போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.