வெளிப்படுத்தப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் மினி விசன் நெக்ஸ்ட் 100 கான்செப்ட்

ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் மினி நிறுவனங்களின் தாய் நிறுவனமான BMW  வின் செண்டெனியல் செளிப்ரேசன் நிகழ்ச்சியில்  ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் மினி நிறுவனங்களின் விசன் நெக்ஸ்ட் 100 கான்செப்ட் மாடல் வெளிப்படுத்தப்பட்டது. எதிர்காலத்தில் கார்கள் எப்படி இருக்கும் என்பதன் அடிப்படையில்  இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த கார்கள்  முழுவதும் எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் கார்பன் பைபரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ஜின் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த கார் எதிர் கால தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படுவதால் ஹைப்ரிட் அல்லது பியூயல் செல் கொண்டதாகவும் இருக்கலாம்.

முன்புறத்தில் எப்போதும் போல் அந்தந்த நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த கார் பற்றிய மேலும் விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே BMW  நிறுவனமும்  விசன் நெக்ஸ்ட் 100 எனும் கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.