ரூ 6.95 கோடி விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் SUV கல்லினன்

இறுதியாக நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் SUV மாடலான கல்லினன் மாடலை ரூ 6.95 கோடி ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பேண்டம் மாடலின் அடிப்படையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்த மாடலை சிறந்து லக்சுரி SUV மாடல் என்று கூறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கும் விலை உயர்ந்த மற்றும் தூய்மையான கல்லினன் வைரத்தின் நினைவாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதன் வெளிப்புறம் மற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் போல அதே தாத்பரியத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறத்தில் மர வேலைப்பாடுகள், டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான நினைத்து கூட பார்க்க முடியாத அளவு வசதிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 5341 மில்லி மீட்டர் நீளமும், 2164 மில்லி மீட்டர் அகலமும் மற்றும் 1835 மில்லி மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 600 லிட்டர் பொருள் வைக்கும் இட வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் நைட் விஷன், இரவு நேர வைல்ட் லைப் மற்றும் பெடெஸ்ட்ரைன் வார்னிங், குரூஸ் கன்ட்ரோல், கொல்லிசன் வார்னிங் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்கள் என்றால் எப்படி இருக்கும் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்த புதிய கல்லினன் SUV மாடல் முந்தய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விட ஒரு படி மேலே இருக்கும் என்றால் எப்படி இருக்கும் என நீங்களே யூகித்து கொள்ளுங்கள். இந்த மாடலில் 6.75 லிட்டர் டர்போ சார்ஜ் V 12 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 571 bhp திறனையும் 850 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன கார்களிலேயே இந்த மாடலில் தான் முதல் முறையாக நான்கு வீல் டிரைவ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் சாலையின் தன்மைக்கு ஏற்றவாறு தானாகவே மாற்றிக்கொள்ளும் எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.