பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்கோடா கோடியாக் SUV (VisionS)

ஸ்கோடா நிறுவனம் பாரிஸ் மோட்டார் கண்காட்சியில் விசன் S கான்செப்டின் தயாரிப்புநிலை மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு கோடியாக் என பெயரிப்பட்ட்டுள்ளதாகவும் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் இந்த  விசன் S கான்செப்டை வெளியிட்டது ஸ்கோடா நிறுவனம்.

முகப்பு கிரில் மற்றும்  வடிவமைப்பு என ஸ்கோடா மாடலின் பாரம்பரிய டிசைன் தத்பரியத்தில் அடுத்த  தலைமுறைக்கு ஏற்ற அம்சங்களை புகுத்தி இந்த  மாடலை வடிவமைத்துள்ளது ஸ்கோடா  நிறுவனம். இது பார்பதற்கு முழுமையான மற்றும் பெரிய SUV போல் தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் ஸ்கோடா எட்டி மாடலை விட பெரியதாக இருக்கும்.

மேலும் இந்த மாடல் 5, 6 மற்றும் 7 பேர் அமரக்கூடிய இருக்கை கொண்டதாக கிடைக்கும். இந்த மாடலில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீஸல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.