டாடா ஹாரியர் மாடலின் தொழில்நுட்ப விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது

டாடா நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரியர் SUV மாடலின் தொழில்நுட்ப மற்றும் உபகரணங்கள் தொடர்பான விவரங்கள் மற்றும் உட்புற படங்கள் என அணைத்து வித தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த மாடலை ரூ 30000 முன்பணமாக செலுத்தி டாடாவின் அதிகாரப்பூர்வ இணையத்திலோ அல்லது அருகில் உள்ள டீலர்ஷிப்பிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல் முதல் முறையாக 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா வின் இந்த புதிய SUV கான்செப்ட் மாடல் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட மாடல்களில் ஒன்று ஆகும். மேலும் இந்த மாடல் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் புதிய H5X கான்செப்ட் மாடல் டாடா வின் புதிய OMEGA (Optimal Modular Efficient Global Advanced) எனும் பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்பார்ம் லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மாடலின் D8 ஆர்கிடெக்ச்சர் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் டாடா வின் மேம்படுத்தப்பட்ட இம்பேக்ட் 2.0 எனும் டிசைன் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் முன்புறத்தில் மற்ற டாடா மாடல்களில் உள்ள க்ரில் அமைப்பு தான் கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் சிறப்பாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் முழுமையாக கம்பீரமான SUV தோற்றத்தை தருகிறது. இந்த மாடல் 4598 மிமீ நீளமும், 1894 மிமீ அகலமும், 1706 மிமீ உயரமும், 2741 மிமீ வீல் பேசும் மற்றும் 205 மிமீ தரை இடைவெளியும் கொண்டது. 

டாடா ஹாரியர் மாடலில் கொடுக்கப்பட்டுள்ள சில சிறப்பான வசதிகள்:

  • செனான் HID ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
  • 3D LED பின்புற விளக்குகள் 
  • சாப்ட் டச் டேஷ் போர்டு 
  • 8.8” டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் 
  • JBL ஸ்பீக்கர்ஸ் 
  • 7" கலர் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் 
  • ஆறு காற்றுப்பை 
  • ரெயின் சென்சிங் வைப்பார் 

இந்த மாடல் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சினில் கிடைக்கும். இந்த எஞ்சின் 140PS @ 3750rpm திறனையும் 350Nm @ 1750-2500rpm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்மிஷன் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் நான்கு வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை, எனினும் டெர்ரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் XE, XM, XT மற்றும் XZ என நான்கு வேரியன்ட்டுகளில் கிடைக்கும். இந்த மாடலின் மீடியா டிரைவ் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.