லியோனல் மெஸ்ஸியின் டாடா மோட்டோர்ஸ் விளம்பரம் & கைட் மாடலின் டீசர் வெளியிடப்பட்டது

லியோனல் மெஸ்ஸியின் நடிப்பில் உருவான முதல் தொலைகாட்சி விளம்பரத்தை விரைவில் வர இருக்கும் கைட் மாடலின் டீசர் உடன் சேர்த்து வெளியிட்டுள்ளது டாடா நிறுவனம். கைட் மாடல் ஹேட்ச்பேக் மற்றும் செடான் என இரண்டு விதங்களிலும் வெளியிடப்படும். இந்த மாடலின் முகப்பு விளக்கு, பின்புற விளக்கு மற்றும் கைப்பிடிகள் ஆகியை டீசர் வீடியோவில் தெரிகிறது. மற்ற விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த மாடல் மாருதி செளிரியோ, செவ்ரொலெட் பீட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த மாடல் இண்டிகா  மற்றும் இண்டிகோ மாடல்களுக்கு மாற்றாக இருக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த மாடல் 3.5 முதல் 6 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.