டாடா நெக்ஸன் AMT மாடலின் முன்பதிவு தொடங்கப்பட்டது

டாடா நிறுவனம் நெக்ஸன் AMT மாடலின் முன்பதிவை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ரூ 11,000 முன்பணமாக செலுத்தி அணைத்து ஷோரூம்களிலும்  நெக்ஸன் AMT மாடலை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாடல் ஒரு சில வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸன் AMT மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின்களிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் மூன்று சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். 1496cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் 110PS @ 3,750rpm திறனையும் 260Nm @ 1,500-2,750rpm இழுவைதிறனையும் வழங்கும். மற்றும் 1198cc கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின் 110 PS @ 5,000rpm திறனையும் 170Nm @ 2,000-4,000rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலின் இரண்டு எஞ்சின்களிலுமே ஆறு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக்  ட்ரான்ஸ்மிஷனில் பொருத்தப்பட்டுள்ளது.

AMT கியர் பாக்ஸ் கொண்ட மாடல் டாப் வேரியன்டான XZ+ வேரியன்டில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஆரம்ப மற்றும் மத்திய வேரியன்டுகளில் வெளியிடப்படுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.