ரூ 5.57 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டாடா டியாகோ NRG கிராஸ்

டாடா நிறுவனம் டியாகோ மாடலின் அடிப்படையிலான டியாகோ NRG கிராஸ் மாடலை ரூ 5.57 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதன் பெட்ரோல் மாடல் ரூ 5.57 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும் டீசல் மாடல் ரூ 6.41 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறத்தில் பாடி கிளாடிங்கும், சில ஒப்பனை மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் தரை இடைவெளியும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டாடா டியாகோ NRG மாடலில் கிராஸ் ஓவர் மாடல் போன்ற பாடி கிளாடிங், ரூப் ரயில், பின்புற ஸ்பாய்லர், பின்புறத்தில் கருப்பு நிற இன்செர்ட், கருப்பு நிற பக்கவாட்டு கண்ணாடி, புதிய அலாய் வீல் மற்றும் சில ஒப்பனை மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. மேலும் இதன் தரை இடைவெளி 165 மில்லி மீட்டர் லிருந்து 180 மில்லி மீட்டர் ஆகா அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகியவையும் சிறிது அதிகரிக்கப்பட்டுள்ளது.

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் என்ஜின்களில் தான் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இதன் இரண்டு மாடலும் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இந்த மாடல் மாருதி சுசூகி செலிரியோ X, மஹிந்திரா KUV100 NXT மற்றும் போர்டு பிரீஸ்டைல் போன்ற கிராஸ் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.