உலகிலேயே மிக அதிக ரேஞ் மற்றும் ஆக்சிலரேஷன் கொண்ட பேட்டரியை அறிமுகப்படுத்தியது டெஸ்லா

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான  டெஸ்லா P100D எனும் பேட்டரியை மாடல் S மற்றும் மாடல் X SUV  கார்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாடல்-S SUV  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.5 வினாடிகளில் கடந்து விடும் மேலும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 506 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். அதே போல்  மாடல்-X SUV  கார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் கடந்து விடும் மேலும் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 465 கிலோ மீட்டர் தூரம் வரையம் செல்லும்.

இந்த P100D பேட்டரி மாடல் S மற்றும் மாடல் X SUV  கார்களின் டாப் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே இந்த கார் வைத்திருப்பவர்கள் இந்த புதிய பேட்டரிக்கு மாற்ற 20,000 டாலர்கள் ஆகும். ஏற்கனவே இந்த காரை முன்பதிவு செய்தவர்களும் 10,000 டாலர்களை கூடுதலாக செலுத்தி P100D பேட்டரி கொண்ட மாடலை மாற்றிக்கொள்ளலாம். 

டெஸ்லா நிறுவனம் 2018 ஆம் ஆண்டு மாடல்3 மூலம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நுழைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.