வெளிப்படுத்தப்பட்டது மேம்படுத்தப்பட்ட புதிய செவ்ரோலேட் பீட், பீட் ஆக்டிவ் மற்றும் எஸன்டியா

செவ்ரோலேட் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு பீட் ஆக்டிவ் மற்றும் எஸன்டியா மாடல்களை வெளியிடப்படும்  எனவும் மேலும் இரண்டு வருடத்திற்குள் அனைத்து மாடல்களும் புதுப்பிக்கப்படும்  எனவும் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி மேம்படுத்தப்பட்ட புதிய செவ்ரோலேட் பீட், பீட் ஆக்டிவ் மற்றும் எஸன்டியா மாடலின் படங்களை வெளியிட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட பீட் மாடல் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெளிப்புற தோற்றத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. முன்புறத்தில் புதிய முகப்பு கிரில், முகப்பு விளக்குகள் என முழுவதும் மாற்றப்பட்டுள்ளது. உட்புறம் புதிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது அதே 1.2 லிட்டர்  பெட்ரோல்  1 லிட்டர்  டீசல்  என்ஜினில் தான் கிடைக்கும். 

இதன்  பெட்ரோல் என்ஜின் 1199CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 936CC கொள்ளளவும்  கொண்டது. இதன்  பெட்ரோல் என்ஜின்  77.9bhp (6200 rpm) திறனும் 106.5Nm (4400rpm)   இழுவைதிறனும் மற்றும் டீசல் எஞ்சின்  57.1bhp (4000 rpm) திறனும் 142.5Nm (1750rpm)   இழுவைதிறனும் கொண்டது. 

செவ்ரோலேட் நிறுவனம் விரைவில் மேம்படுத்தப்பட்ட  ட்ரையல்பிளேசர் மற்றும் குரூஸ் போன்ற மாடல்களையும் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.