தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் டொயோடா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மாடல்
டொயோடா நிறுவனம் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட இன்னோவா க்ரிஸ்டா மாடலை தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. டெல்லியில் 2000 cc கொள்ளளவிற்கு அதிகமான டீஸல் என்ஜின் கொண்ட மாடல்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் இன்னோவா மாடலின் விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் டொயோடா நிறுவனம் புதிய 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜினை சோதனை செய்து வருகிறது.
இந்தோனேசியாவில் இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. அனால் இந்த என்ஜின் இந்தியாவில் வெளியிடப்படவில்லை புதிய 2.7 லிட்டர் என்ஜினுடன் தான் வெளியிடப்படும். தற்போது இந்த மாடல் 2.4 மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது.
2.4 லிட்டர் என்ஜின் 150 bhp (3400 rpm) திறனும் 343Nm (1400-2500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 15.01 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 2.8 லிட்டர் என்ஜின் 174 bhp (3400 rpm) திறனும் 360Nm (1200-3400rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 14.29 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.