2016 வாகன கண்காட்சியில் மேம்படுத்தப்பட்ட இன்னோவா மற்றும் வியோஸ் மாடல்களை காட்சிப்படுத்துகிறது டொயோடா

டொயோடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட இன்னோவா மற்றும் வியோஸ் மாடல்களை 2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சியில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேம்படுத்தப்பட்ட இன்னோவா மாடலில் வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய முன்புற கிரில், புதிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள் மட்டும் பனி விளக்குகள் ஆகியாவை புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்திலும் அதிக சொகுசான அனுபவத்தை தரும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக டேஸ் போர்டு முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.

2016  டொயோடா  இன்னோவா மாடலின்  என்ஜினும் மாற்றப்பட்டுள்ளது. புதிய 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 149 Bhp திறனையும் 300 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும்  இந்தோனேசியாவில் கிடைக்கிறது. ஆனால் இந்த பெட்ரோல் எஞ்சின் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுமா என்பது சந்தேகமே.

மேலும் இத்துடன் வியோஸ் எனும் புதிய செடான் மாடலையும் வெளியிடுகிறது டொயோடா  நிறுவனம். இந்த மாடல் சிறிய கரோலா ஆல்டிஸ் மாடல் போன்று தோற்றமளிக்கிறது. எஞ்சின் மற்றும் உட்புறம் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. வாகன கண்காட்சியில் மேலும் பல தகவல்கள் வெளியிடப்படும் என தெரிகிறது. இந்த மாடல் மாருதி சுசுகி சியாஸ், வோல்க்ஸ் வேகன் வெண்டோ மற்றும் ஹோண்டா சிட்டி மாடல்களுக்கு போட்டியாக வெளியிடப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.