ரூ. 8.41 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஃபோர்ஸ் குர்கா

ஃபோர்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட குர்கா மாடலை ரூ. 8.41 லட்சம் கோவை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் என்ஜின் மற்றும் ஒப்பனையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஐந்து கதவுகள் கொண்ட எக்ஸ்பெடிஷன் மற்றும் மூன்று கதவுகள் கொண்ட எக்ஸ்ப்ளோர் எடிசன் என இரண்டு வேரியண்டில் கிடைக்கும்.  எக்ஸ்பெடிஷன் மாடல் ரூ. 8.41 லட்சம் விலையிலும் எக்ஸ்ப்ளோர் எடிசன் மாடல்  ரூ. 9.36 லட்சம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாடலில் புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர்கள், புதிய சஸ்பென்ஷன் மற்றும் புதிய ஸ்டேரிங் வீல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்பெடிஷன் மாடல் இரண்டு வீல் ட்ரைவிலும் எக்ஸ்ப்ளோர் எடிசன் மாடல் நான்கு வீல் ட்ரைவிலும் கிடைக்கும். இதன் இரண்டு மாடலும் திறந்த மற்றும் மூடிய மேற்கூரையுடன் கிடைக்கும். இதன் மூடிய மேற்கூரை கொண்ட மாடலில் குளிரூட்டி கிடைக்கும்.

இந்த மாடலில் நான்கு சிலிண்டர் கொண்ட 2.6 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 85Bhp திறனையும் 230Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த என்ஜின் BSIV மாசுக்கட்டுப்பாட்டில் கிடைக்கும். இந்த மாடலில் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.