வால்வோ நிறுவனம் S90 மாடலை தனது இனையத்தில் வெளியிட்டது

வால்வோ நிறுவனம் தனது இனைய தளத்தில்  S90 மாடலை வெளிப்படுத்தியுள்ளது இதன் மூலம் இந்த மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சமீபத்தில் வெளியிடப்பட்ட XC90 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செடான் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில்  மற்ற வால்வோ மாடல்களில் கிடைக்கும் பாதுகாப்பு வசதிகள் சொகுசு வசதிகள் என அனைத்தும் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் செமி அட்டானமஸ் டிரைவ் பைலட் இண்டெலிஜெண்ட் சேப்டி அசிஸ்ட்  ஆகியவையும் கிடைக்கும். இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது இரண்டு வித திறன்களில் கிடைக்கும். ஒன்று 187 Bhp  திறனையும் 400 Nm  இழுவைதிறனையும் வழங்கும். மற்றொன்று 231 Bhp  திறனையும் 480 Nm  இழுவைதிறனையும் வழங்கும்.

இந்த மாடல் தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் ரூ. 55 முதல் 65 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். இந்த மாடல் ஆடி A6, BMW  5 சீரீஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ்  E - கிளாஸ் போன்ற மாடல்களிக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.