2017 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது வோல்க்ஸ்வேகன் I.D கிராஸ்

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் மாடலான I.D கிராஸ் மாடலை 2017 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் வெளிப்படுத்தியது. இது I.D குடும்பத்தில் வெளியிடப்பட்ட மூன்றாவது மாடல் ஆகும். இதன் முதல் I.D ஹேட்ச் கான்செப்ட் 2016 ஆம் ஆண்டு பாரிஸ் வாகன கண்காட்சியிலும் இரண்டாவது I.D பஸ் கான்செப்ட் 2017 ஆம் ஆண்டு டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மாடலில் இரண்டு ஆக்சிலிலும் ஒவ்வொரு மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை இணைந்து 300Bhp திறனை வழங்கும். இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ள 83kW பேட்டரி ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500  கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.

இந்த மாடல் ஒரு கூப் SUV வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற I.D கான்செப்ட் மாடல்கள் போலவே இதிலும் ஏராளமான வசதிகள், LED விளக்குகள், எலெக்ட்ரிக் உபகரணங்கள் என நிறைய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மற்ற I.D கான்செப்ட் மாடலுடன் சேர்த்து 2020  ஆம் ஆண்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வோல்க்ஸ்வேகன் ௨௦௨௫ ஆம் ஆண்டுக்குள் முப்பதுக்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் கார்களை வெளியிட திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.