ரூ.31.98 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது 2017 ஆம் ஆண்டு டொயோடா கேம்ரி ஹைபிரிட்

டொயோடா நிறுவனம் கூடுதல் உபகரணங்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு கேம்ரி ஹைபிரிட் மாடலை ரூ.31.98 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடலை விட சுமார் ஒரு லட்சம் விலை அதிகம்.

இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் வடிவமைப்பு மற்றும் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. கூடுதலாக உபகரணங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் புதிய LED பனி விளக்குகள், 15 இன்ச் அலாய் வீல், பகல் நேரத்தில் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய LED முகப்பு விளக்குகள்,  தானியங்கி பக்கவாட்டு கண்ணாடி, 12  ஸ்பீக்கர் கொண்ட JBL மியூசிக் சிஸ்டம், புதிய நேவிகேஷன் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் சார்ஜர், டயர் பிரஷர் மானிடர் சிஸ்டம் மற்றும் ஒன்பது காற்றுப்பைகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 160 bhp (5700 rpm) திறன்,  213Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறன்  கொண்ட  2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் மற்றும் 143 Kw திறன்,  273Nm  டார்க் எனும்  இழுவைதிறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 19.16 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது. எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இரண்டும் இனைந்து செயல்படும் போது 205 bhp திறனை வெளிப்படுத்தும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.