2018 டெல்லி வாகன கண்காட்சி: காட்சிப்படுத்தப்பட்டது மஹிந்திரா TUV ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் SUV

மஹிந்திரா நிறுவனம் யாரும் எதிர்பாராத விதமாக TUV300 மாடலின் கன்வெர்ட்டிபிள் வெர்சனான TUV ஸ்டிங்கர் மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் சில ஒப்பனை மாற்றங்களை செய்து ஒரு சிறப்பான கன்வெர்ட்டிபிள் SUV மாடலாக இந்த மாடலை வடிவமைத்துள்ளது. 

மஹிந்திரா நிறுவனம் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் நிறைய மாற்றங்களை கொடுத்து இந்த கன்வெர்ட்டிபிள் SUV மாடலை வடிவமைத்துள்ளது.  TUV ஸ்டிங்கர் மாடல் தயாரிப்பு நிலையை அடையுமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. மஹிந்திரா நிறுவனம் மக்களின் ஆவலை பொறுத்து இந்த மாடல் தயாரிப்பு நிலையை அடையுமா என்பது பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த மாடல் தயாரிப்பு நிலையை அடையாவிட்டாலும் மேம்படுத்தப்பட்ட TUV300  மாடலில் இதன் அம்சங்களை நிறைய எதிர்பார்க்கலாம்.

இந்த மாடலில் TUV300 மாடலில் உள்ள அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 100Bhp திறனும் 240Nm இழுவைத்திறனும் கொண்டது. மஹிந்திரா நிறுவனம் TUV ஸ்டிங்கர் கன்வெர்ட்டிபிள் SUV மாடலையும் நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட மாடலாக வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.