ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது ஆடி Q2 காம்பேக்ட் SUV

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆடி நிறுவனம் நடந்து கொண்டிருக்கும் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் Q2 காம்பேக்ட் SUV  மாடலை  வெளிப்படுத்தியுள்ளது. இது Q3 SUV  மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்படும் மேலும் ஆடி நிறுவனத்தின் குறைந்த விலை கொண்ட SUV  மாடலாகவும் இருக்கும். மேலும் இந்த மாடல் உறுதியாக இந்தியாவில் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.

வெளிப்புற வடிவமைப்பில் Q2 SUV  மற்றும் தற்போது வெளியிடப்பட்ட R8 செடான் போன்ற மாடல்களில் இருந்து அதிக பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இருப்பினும் இதன் வடிவமைப்பு ஒரு புதிய தோற்றத்தை தருகிறது. குறிப்பாக இளைஞர்களை  கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிறைய கூடுதல் உபகரணங்களும் இந்த மாடலுக்கு வழங்கப்படுமாம். உட்புறம் அப்படியேA3 செடான் மாடலில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 4.2 மீட்டர் நீலமுன் 405 லிட்டர் கொள்ளளவு   பொருகள் வைக்க இடவசதியும் கொண்டுள்ளது.

இந்த மாடல் 1.4 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினிலும் கிடைக்கும். மேலும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் கிடைக்கும் என எதிர்பார்கப்படுகிறது. இதன் டாப் வேரியன்ட் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும் மற்ற மாடல்கள் முன்புற டிரைவ் சிஸ்டத்திலும் கிடைக்கும். இந்த மாடல் ஐரோப்பிய நாடுகளில் இந்த வருட இறுதியிலும் இந்தியாவில் அடுத்த வருட ஆரம்பத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.