Q8 மாடலின் டீசர் வரைபடங்களை வெளியிட்டது ஆடி

ஆடி நிறுவனம் Q8 மாடலின் டீசர் வரைபடங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இந்த மாடல் 80 களில் ஆடி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Ur-கோட்ரோ மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 2017 ஆம் ஆண்டு டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மாடல் தான் ஆடி நிறுவனத்தின் அதிக விலை கொண்ட மாடலாக வெளிவர உள்ளது.

இந்த மாடல் SUV  மற்றும் கூப் வடிவமைப்பின் கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ஆடி நிறுவனத்தின் புதிய MLB EVO பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆடி நிறுவனத்தின் டிசைன் ஹெட் இந்த மாடல் பற்றி கூறும் போது, இந்த மாடல் சிறந்த இட வசதி கொண்ட மாடலாகவும் சிறந்த சொகுசு அனுபவத்தை தரும் மாடலாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.