F Type SVR மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியது ஜகுவார்

ஜகுவார் நிறுவனம் F Type ஸ்போர்ட்ஸ் கார் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட F Type SVR மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியது. இந்த மாடலும் கண்வேர்டிப்ல் மற்றும் கூப் என இரண்டு விதங்களிலும் கிடைக்கும். இந்த மாடல் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

இந்த F Type SVR மாடளுக்கும் பழைய F Type மாடளுக்கும் உட்புறம் மற்றும் வெளிப்புற தோற்றத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இதன் செயல்திறனை அதிகரிப்பதற்காக சேஸி மற்றும் பிரேம்கள் இலகு எடை கொண்ட கார்பன் பைபரால் வடிவமைக்க்பாட்டுள்ளது. இந்த மாடல் 5.0 லிட்டர் டர்போ சார்ஜ்  பெட்ரோல் என்ஜினில் மட்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது  543 bhp (6500 rpm) திறனும் 680Nm (3500rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்திலும் கிடைக்கும்.

இந்த மாடல் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை ஆனால் இதன் முன்பதிவு ஐரோப்பிய நாடுகளில்  தொடங்கப்பட்டுவிட்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.