2018 ஆம் ஆண்டு உரஸ் எனும் SUV மாடலை வெளியிடுகிறது லம்போர்கினி

உலகில் புகழ் பெற்று விளங்கும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி உரஸ் எனும் SUV  மாடலை 2018 ஆம் ஆண்டு வெளியிடும் என அறிவித்துள்ளது. இந்த மாடல் 2012 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லம்போர்கினி  நிறுவனம் உரஸ் எனும் SUV மாடலின் கான்செப்ட் படங்களை மட்டும் தான் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் தொடர்பான வேறு எந்த தொழில்நுட்ப தகவல்களும் வெளியிடப்படவில்லை.  இந்த மாடளுக்காக ஆலையின்  உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு உலக அளவில் வெளியிடப்பட்டாலும் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது தெரியவில்லை. மேலும் தகவல்களை பெற மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.