விற்பனையில் 10 லட்சம் எண்ணிக்கையை கடந்தது மஹிந்திரா பொலிரோ

மஹிந்திரா நிறுவனத்தின் மிக அதிக விற்பனையாகும் மாடலான பொலிரோ மாடல் விற்பனையில் 10 லட்சம் எண்ணிக்கையை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த மாடல் முதன் முதலாக 2000 ஆவது ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பதினெட்டு வருடமாக சிறந்த விற்பனையை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மாதம் கூட இந்தியாவில் விற்பனை ஆகும் சிறந்த பத்து கார்களில் இந்த மாடலும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஏராளமான புதிய SUV மாடல்கள் வெளிப்பட்டாலும் இந்த மாடல் தொடந்து விற்பனையின் முத்திரை பதித்து வருகிறது. இந்த மாடலின் கட்டமைப்பு, வடிவம் ஆகியவை மக்கள் மனதில் நீண்ட வருடமாக இடம் பிடித்திருப்பதற்கு ஒரு காரணம். மேலும் பல வருடங்கள் தொடந்து இந்த மாடல் விற்பனை செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனத்திற்கு சிறப்பான பெயர் வாங்கி தந்த மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் தற்போது 1.5 லிட்டர் mHawkD70 மற்றும் 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் எஞ்சின் மாடல் 70.3 Bhp  திறனையும் 195 Nm  இழுவைத்திறனையும், 2.6 லிட்டர் என்ஜின் மாடல் 63 bhp (3600 rpm) திறனையும் 195Nm (1400-2200rpm) டார்க் எனும்  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல்களில் மஹிந்திரா நிறுவனத்தின் மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.