ரூ 7.9 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது புதிய மஹிந்திரா XUV300 காம்பேக்ட் SUV

மஹிந்திரா நிறுவனம் புதிய XUV300 காம்பேக்ட் SUV மாடலை ரூ 7.9 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் சாங்யாங் டிவோலி மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் TUV300 மற்றும் நுவோ ஸ்போர்ட் மாடல்களை அடுத்து வெளியிடும் மூன்றாவது நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட SUV மாடல் ஆகும்.

வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்:

  • மஹிந்திரா XUV300 W4- ரூ 7.90 லட்சம்
  • மஹிந்திரா XUV300 W6- ரூ 8.75 லட்சம் 
  • மஹிந்திரா XUV300 W8- ரூ 10.25 லட்சம் 
  • மஹிந்திரா XUV300 W8 (O)- ரூ 11.44 லட்சம்

டீசல் 

  • மஹிந்திரா XUV300 W4- ரூ 8.49 லட்சம்
  • மஹிந்திரா XUV300 W6- ரூ 9.30 லட்சம்
  • மஹிந்திரா XUV300 W8- ரூ 10.80 லட்சம்
  • மஹிந்திரா XUV300 W8 (O)- ரூ 11.99 லட்சம்

இந்த மாடல் ஒரு சிறப்பான SUV போன்ற தோற்றத்தை தருகிறது. மேலும் இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், ABS மற்றும் EBD என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் சாங்யாங் டிவோலி மாடலின் வடிவமைப்பை அப்படியே பயன்படுத்தாமல் நிறைய மாற்றங்களை செய்துள்ளது. மேலும் XUV500 மாடல் போல சிறுத்தையை அடிப்படியாக கொண்டு சில மாற்றங்களை வெளிப்புறத்தில் செய்துள்ளது. உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை, சாங்யாங் டிவோலி மாடலின் வடிவமைப்பு அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் மராஸோ மாடலில் உள்ள புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும்.  இதன் டீசல் எஞ்சின் 115bhp திறனையும் 300Nm இழுவைத்திறனையும் வழங்கும் மற்றும் இதன் பெட்ரோல் எஞ்சின் 110bhp திறனையும் 200Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு எஞ்சின் மாடலும் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, கருப்பு, சில்வர், ஆக்வா மரைன், இரட்டை வண்ணத்திலான சிவப்பு மற்றும் இரட்டை வண்ணத்திலான ஆக்வா மரைன் என எட்டு வண்ணங்களில் கிடைக்கும். இந்த மாடல் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா, போர்டு ஈகோ ஸ்போர்ட், ஹோண்டா WR-V மற்றும் டாடா நெக்ஸன் போன்ற நான்கு மீட்டருக்கும் குறைவான SUV மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.