மார்ச் 8 ஆம் தேதி வெளியிடப்படும் மெர்சிடிஸ் மேபக் S600 கார்ட்

ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் விலையுயர்ந்த சொகுசு கார்களில் ஒன்றான மேபக் S600 கார்ட் மாடலை மார்ச் 8 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இது மேபக் S600 மாடலின் ஆர்மர்ட் வெர்சன் ஆகும். இந்த மாடல் புல்லட் ப்ரூப் கொண்டது. மேலும் வெடி குண்டையும் தாங்கும் வல்லமை கொண்டது. 

இந்த மாடலில் 6.0 லிட்டர் V  12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 523 bhp திறனும் 830 Nm இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5 வினாடிகளுக்குள் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 249 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். இந்த மாடலில் 7 ஸ்பீட் கொண்டஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மிகசிறந்த சொகுசு அனுபவத்தை  தரும் வகையில் இருக்கைகளும் உட்புறமும் புல்லட் மற்றும் வெடிகுண்டு போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு தரும் வகையில் வெளிப்புறமும்  வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 2.9 கோடி விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.