இன்டிகா மற்றும் இன்டிகோ மாடல்களை விரைவில் நிறுத்தும் டாடா

டாடா நிறுவனம் இறுதியாக இன்டிகா மற்றும் இன்டிகோ மாடல்களை விரைவில் விற்பனையில் இருந்து நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. இன்டிகா மாடல் 1998 ஆம் ஆண்டும் இன்டிகோ மாடல் 2002 ஆம் ஆண்டும் முதலில் வெளியிடப்பட்டது. டாடா நிறுவனத்தின் வெற்றி பெற்ற மாடல்களில் இவ்விரு மாடல்களுக்கும் கண்டிப்பாக ஒரு நிரந்தர இடம் உண்டு. மேலும் டாடா நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இவ்விரு மாடல்கள் பெரிய உதவி புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல்கள் 1395CC கொள்ளளவு கொண்ட 1.4 லிட்டர் டீசல் எஞ்சினில் கிடைக்கும். இந்த டீசல் என்ஜின் 70 bhp (4000 rpm) திறனும் 140Nm (1800-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இவ்விரு மாடல்களும் LS மற்றும் LX என இரண்டு வெறியன்ட்டுகளில் மட்டும் கிடைக்கும். டேக்ஸி சந்தையில் இந்த மாடல் மிகச்சிறப்பான வெற்றியை பதிவு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. டாடா நிறுவனம் இந்த மாடலின் விற்பனையை நிறுத்தினாலும் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீஸை தொடர்ந்து செய்யும் என அறிவித்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.