ரூ 5.72 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டாடா டிகோர் பஸ் எடிசன்

டாடா நிறுவனம் டிகோர் மாடல் வெளியிடப்பட்டு ஓராண்டு ஆனதை முன்னிட்டு டிகோர் பஸ் சிறப்பு பாதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது. இந்த பஸ் சிறப்பு பதிப்பு மாடல் XT வேரியன்ட்டின் அடிப்படையில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடல் ரூ 5.72 லட்சம் சென்னை ஷோரூம்விலையிலும் டீசல் மாடல் ரூ 6.61 லட்சம் சென்னை ஷோரூம் விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பஸ் சிறப்பு பதிப்பு மாடலில் கருப்பு நிற மேற்கூரை, சிவப்பு வண்ணத்துடன் கூடிய இரட்டை வண்ண வீல் கவர், சிவப்பு நிற வேலைப்பாடுடன் கூடிய க்ரில், கருப்பு நிற பக்கவாட்டு கண்ணாடி, ரூப் ரயில் மற்றும் உட்புறத்தில் சிவப்பு நிற வேலைப்பாடுகள் மற்றும் புதிய சீட் கவர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் என்ஜின்களில் தான் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த டிகோர் பஸ் சிறப்பு பதிப்பு மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.