ரூ 6.43 லட்சம் மற்றும் ரூ 7.57 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது டாடா டியாகோ மற்றும் டிகோர் JTP

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களை முறையே ரூ 6.43 லட்சம் மற்றும் ரூ 7.57 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. டாடா நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் மாடல்களின் பெர்பார்மன்ஸ் வெர்சனான டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. JTP என்பது Jayem Tata Performance என்பதின் சுருக்கம் ஆகும். டாடா நிறுவனம் கோவையை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் பெர்பார்மன்ஸ் மாடல்களுக்கென பிரத்தியேக கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மாடல்களிலும் சில ஒப்பனை மாற்றங்களும் எஞ்சின் மேம்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா டியாகோ மற்றும் டிகோர் JTP மாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள்:

  • 114PS @ 5000rpm திறனையும் 150Nm @ 2000-4000rpm இழுவைத்திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் டர்போ ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 10 வினாடிகளில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • பானட்டில் ஏர் வென்ட்
  • மேம்படுத்தப்பட்ட புகைபோக்கி சிஸ்டம்
  • மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு 
  • மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் பவர் ஸ்டீரிங்
  • 4 மில்லி மீட்டர் தரை இடைவெளி மற்றும் அகலமான டயர்
  • புதிய பம்பர் மற்றும் பெரிய ஏர் இன்டேக் கொண்ட புதிய முன்புற அமைப்பு 
  • புதிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
  • புதிய 15 இன்ச் இரட்டை வண்ண அலாய்
  • வித்தியாசமான வண்ணம் கொண்ட பக்கவாட்டு கண்ணாடி 
  • கருப்பு நிற மேற்கூரை
  • முற்றிலும் கருப்பு வண்ண உட்புறம் 
  • தோல் ஸ்டீரிங் கவர்
  • புதிய தோல் இருக்கை
  • அலுமினியம் பெடல்

காற்றுப்பை, 5 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ஸ்ட் சிஸ்டம், எட்டு ஸ்பீக்கர் கொண்ட ஹார்மன் மியூசிக் சிஸ்டம், ABS மற்றும் EBD என சாதாரண டியாகோ மற்றும் டிகோர் மாடலின் XZ வேரியண்டில் உள்ள அணைத்து வசதிகளும் இந்த மாடலிலும் உள்ளது. இந்த மாடல்கள் தான் அதனதன் செக்மென்ட்டுகளில் விலை குறைந்த மற்றும் அதிக செயல்தின் கொண்ட மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.