டோயோடாவின் புதிய ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் SFR

டொயோட நிறுவனம் புதிய ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்டை  வெளியிட்டுள்ளது. இது சிறிய மற்றும் குறைந்த எடை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த கார் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் கிளாசிக் கூப் காரின் வடிவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த என்ஜின் இந்த மாடலில் பயன்படுத்தப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. ஆனால் கண்டிப்பாக அதிக திறன் கொண்டதாகவே இருக்கும். மேலும் பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. 

இந்த மாடல் 12 முதல் 15 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் இந்தியாவில் வெளியிடப்படுமா அப்படி வெளியிடப்பட்டால் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.