ரூ. 5.44 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2017 ஹுண்டாய் எலைட் i20
ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு எலைட் i20 மாடலை ரூ 5.44 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில புதிய உபகரணங்களும் புதிய இரட்டை வண்ணமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் புதிதாக இரட்டை வண்ணத்திலும் மேலும் கூடுதலாக புதிய மரைன் ப்ளூ வண்ணத்திலும் கிடைக்கும். இந்த இரட்டை வண்ணம் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணத்தில் ஆஸ்டா வேரியண்டில் மட்டும் கிடைக்கும். உட்புறத்தில் புதிய ஆரஞ்சு நிற அலங்காரங்களும் 7.0 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.
எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 bhp திறனும் 117Nm டார்க் எனும் இழுவைதிறனும், 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 100 bhp திறனும் 132Nm டார்க் எனும் இழுவைதிறனும் மற்றும் டீசல் என்ஜின் மாடல் 90 bhp திறனும் 224Nm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனிலும், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் நான்கு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனிலும் மற்றும் டீசல் எஞ்சின் ஆறு ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும்.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.