ஃபியட்டின் புதிய கார் ஈகே
ஃபியட் நிறுவனம் புதிய ஈகே என்ற மாடலை வெளிப்படுத்தி உள்ளது. இந்த மாடல் 4500 மில்லி மீட்டர் நீளமும், 1780 மில்லி மீட்டர் அகலமும், 1480 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 2640 மில்லி மீட்டர் வீல் பேசும் கொண்டது. இந்த மாடல் முதலில் ஏகே என்று அழைக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது ஈகே என்று பெயரை மாற்றியுள்ளது.
இந்த மாடல் 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1.3 மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் ஆகியவற்றில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் சிஸ்டதிலும் கிடைக்கும். உட்புறத்தில் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் மேலும் ஃபியட் மாடலில் உள்ள அணைத்து சிறப்புகளும் இதிலும் உள்ளது.
ஆனால் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. முதலில் இந்த மாடல் ஐரோப்பிய மற்றும் ஆப்ரிக்க சந்தைகளில் வெளியிடப்படும்.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.